இறைவா அருள் புரிவாயே
நிறைவாய் கலை தருவாயே
அகத்திருள் நீங்கி அறிவினை நல்கும்
அதிபரும் ஆசான்மார்களும் இங்கு
சுகத்துடன் வாழ பேரருள் தாராய்
தூயவனே நல் இறையோனே (இறைவா)
நம் கலையோங்கி நிலைத்திருந்திடவே
நலம் தரும் பண்பை நிதம் தருவாயே
கலைஞர்கள் தம்மை தந்த நம் ஸாதாத்
கவின் ஒளி வீசும் கலைக்கூடம் (இறைவா)