பாடசாலை ஆனது எமது பள்ளிவாசலுக்கு உரித்தான காணியில் ஒரு திண்ணை பள்ளிக்கூடமாக ஆரம்பிக்கப்பட்டது அப்போது பள்ளிவாயிலுக்கு பொறுப்பதிகாரியாக இருந்த N.I.M அப்துல் மஜீத் கலீபா அவர்களையே முகாமையாளராக கொண்டு இது இயங்கியது. M.C.M ஸ(z)க்கரியா என்பவரே எமது பாடசாலையின் முதல் மாணவர் ஆவார். 1935.01.01 திகதி முதல் இத்திண்ணைப் பாடசாலைக்கு ஊர் நலன் விரும்பிகள் சிலர் புஸ்வத்த ஒயிட்ட என்ற பகுதிகளையும் சேர்த்து உதவி புரிந்த பின்னர் 1935 முதல் மாதம் முதலாம் திகதி முதல் கொடப்பிட்டிய தமிழ் பாடசாலை எனும் பெயரில் ஆரம்பமாகியது.